Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிதாக 17,092 பேருக்கு கொரோனா

ஜுலை 02, 2022 10:06

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று கூடுவதும், குறைவதுமாக உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 18,819 ஆக இருந்தது. நேற்று 17,070 ஆக குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3,904, மகாராஷ்டிரத்தில் 3,249, தமிழ்நாட்டில் 2,385, மேற்குவங்கத்தில் 1,739, கர்நாடகாவில் 1,073 பேருக்கு தொற்று உறுதியானது. 

நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 34 லட்சத்து 86 ஆயிரத்து 326 ஆக உயர்ந்தது. இதையும் படியுங்கள்: 2019-ல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்காதது ஏன்? பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்து 14,684 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 51 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது. 

தற்போது 1,09,568 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,379 அதிகம் ஆகும். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 13 மரணங்கள் உள்பட மேலும் 29 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,168 ஆக அதிகரித்தது. 

நாடு முழுவதும் நேற்று 9,09,776 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 84 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,12,570 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.32 கோடியாக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்