Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் திட்டம் : மாணவர்களிடம் விழிப்புணர்வு

ஜுன் 12, 2022 09:36

சென்னை: சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆக.11 முதல் 17-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை கல்லூரிகள் வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்தும் விதமாக கதை, கட்டுரை, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக மேற்கொண்ட பணிகளை யுஜிசி தளத்தில் (www.ugc.ac.in) பதிவேற்ற வேண்டும்.

தலைப்புச்செய்திகள்