Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி புத்தகத்தில் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் : அமைச்சர் மெய்யநாதன்

ஜுன் 12, 2022 09:12


நாகப்பட்டினம் : ''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,'' என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். நாகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 99வது பிறந்த நாளை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக, 400 பேர், இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகளவில கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் விளையாட்டுத் துறையான, 'கேலோ' இந்தியா திட்டத்தில் சிலம்பாட்டத்தை சேர்க்க நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றுள்ளோம்.விளையாட்டு துறையில், 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.


பள்ளி பாடப்பிரிவுகளில் தமிழர்களின் விளையாட்டான சிலம்பத்தை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழர்களுக்கு சொந்தமான சிலம்பாட்டத்தை பாதுகாத்து வரும் ஆசான்கள் மற்றும் பேராசான்களை கவுரப்படுத்தும் விதமாக, 100 பேரை தேர்ந்தெடுத்து தலா, 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்