Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேங்கோ கிரனிட்டா

ஜுன் 12, 2022 01:05

தேவையான பொருட்கள்: 
கனிந்த மாம்பழங்கள் - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) 
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் மாம்பழங்களை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின் ஒரு சாஸ் பேனில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் நீரை எடுத்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். 
சர்க்கரை கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்பு அதில் அரைத்த மாம்பழ கூழை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் 3-4 மணிநேரம் வைக்க வேண்டும். 
பின் அதை வெளியே எடுத்து, முள்கரண்டியைக் கொண்டு கீறி விட்டு, பின் அதைப் பரிமாறினால், மேங்கோ கிரனிட்டா தயார்.
 

தலைப்புச்செய்திகள்