Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 மாவட்டங்களில் 656 குடியிருப்புகளை இடிக்க உத்தரவு

ஜுன் 07, 2022 06:33

வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு இடியும் நிலையில் உள்ள 656 குடியிருப்புக்களை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் மாவட்டம் தோறும், அரசு ஊழியர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு, சலுகை விலையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புக்களை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலுார் கோட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியாவது: வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1965, 1981 ம் ஆண்டுகளில் கட்டப்பட்டு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள 656 குடியிருப்புக்கள் இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு வசித்தவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். விரைவில் டெண்டர் விடப்பட்டு வீடுகள் இடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்