Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாங்காய் தேங்காய் சட்னி

ஜுன் 07, 2022 12:22

தேவையான பொருட்கள் : 
துருவிய தேங்காய் - ஒரு கப், 
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று, 
கடுகு - கால் டீஸ்பூன், 
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
 கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, 
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும். 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும். 
 

தலைப்புச்செய்திகள்