Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளரிக்காய் பாயசம்

ஜுன் 03, 2022 09:37

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
பால் - 250 மில்லி
சர்க்கரை - தேவையான அளவு
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2
முந்திரி - தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதாம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி  முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். தனியாக அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.  பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

தலைப்புச்செய்திகள்