Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டோனி, மகள் உருவப்படத்தை வடிவமைத்த நெசவு தொழிலாளி

ஜுன் 03, 2022 04:02

சென்னிமலை: சென்னிமலையில் நாடு விடுதலைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட ‘சென்டெக்ஸ்’ கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் தற்போது போர்ட்வை டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர் பிரபல அரசியல் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் உருவத்தினை அப்படியே கைத்தறியில் கை கோர்வை மூலம் போர்கவையாக வடிவமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உருவத்தினை கைத்தறியில் வடிவமைத்தார். அதை தெண்டுல்கரிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றார். இதே போல் முக்கிய பிரமுகர்களின் உருவம் பொரித்த போர்வைகள் தயாரித்து உள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணியில் விளையாடி பல சாதனைகள் படைத்தார். இதையடுத்து அவர் அடிக்கடி சென்னை வந்து செல்வார். இதனால் சென்னை எனது மற்றொரு தாய் வீடு என பெருமையோடு கூறி வருகிறார். இந்த நிலையில் டோனிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னிமலை நெசவு தொழிலாளி அப்புசாமி டோனியுடன் அவரது மகளை கொஞ்சி மகிழும் உருவத்தை அப்படியே படமாக கைத்தறி கோர்வை மூலம் நெசவு செய்து போர்வை உருவாக்கினார். இதை அவர் 35 நாட்கள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நெசவு செய்து வடிவமைத்தார். இதையடுத்து சென்னையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் கிரிக்கெட் அசோசியேஷன் 25-வது ஆண்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் டோனி கலந்து கொண்டார். இதையடுத்து நெசவு தொழிலாளி அப்புசாமி சென்னைக்கு சென்று டோனியை நேரில் சந்தித்து தான் உருவாக்கிய டோனி மற்றும் அவரது உருவம் பொரித்த போர்வையை அவரிடம் கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட டோனி அவரை பாராட்டினார்.

தலைப்புச்செய்திகள்