Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பைமேனியின் மருத்துவ குணங்கள்

ஜுன் 02, 2022 09:24

குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.

குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.

தலைப்புச்செய்திகள்