Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

ஜுன் 02, 2022 12:41

புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், 10 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுதும், 849 மையங்களில், கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இதை, 1.82 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகளை, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 'திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, தேர்வு நடந்த 10 நாட்களில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்காக, வாரியத்தை பாராட்டுகிறேன்' என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்