Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நியூயார்க் பறந்தது திருப்பூர் டி-ஷர்ட்

மே 30, 2022 11:01

திருப்பூர் : ஐ.நா., சார்பில் நடக்கும் சர்வதேச யோகா தினத்துக்காக, திருப்பூரில் தயாரிக்கப்பட்ட, 1,800 'டி--ஷர்ட்'கள், நியூயார்க் அனுப்பி வைக்கப்பட்டன.ஐக்கிய நாடுகள் சபை சார்பில், சர்வதேச யோகா தினம், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில், ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. இதில், ஐ.நா., சபை மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு துாதரக அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்போர் அணிவதற்கான யோகா 'டி--ஷர்ட்'களை, திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் தயாரித்துஉள்ளது. ஸ்டேட் வங்கி, இதற்கான ஆர்டரை வழங்கியுள்ளது.ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் நல்லசிவம் கூறுகையில், ''ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து 'டி- -ஷர்ட்' தயாரித்து அனுப்பி வருகிறோம். இந்தாண்டு மொத்தம் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,800 'ஷர்ட்'களை தயாரித்துள்ளோம். 'டி-ஷர்ட்' முன்பகுதியில் சர்வதேச யோகா தின லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.''சர்வதேச யோகா தின 'டி-ஷர்ட்' தயாரிப்பு ஆர்டர் தொடர்ந்து கிடைப்பதை, பெரிய வாய்ப்பாக மட்டுமின்றி, பெருமையாகவும் நினைக்கிறோம்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்