Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்விக் கொள்கை புரட்சியை உருவாக்கும்; கவர்னர் பெருமிதம்

மே 28, 2022 12:16

திருவாரூர் : ''தேசிய கல்விக்கொள்கை கல்வி புரட்சியை உருவாக்கும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.திருவாரூர் மத்திய பல்கலையில் நேற்று தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. கவர்னர் ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, கல்வி புரட்சியை உருவாக்கும். பல அரசுகளால் மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும்.உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம், 40 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில் படிப்படியாக அழிக்கப்பட்டது.

இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டினர், அவர்களது நாட்டிற்கு கொண்டு சேர்த்தனர்.ஆங்கிலேயர் கால கல்விக் கொள்கையை, 75 ஆண்டுகளுக்கு பின், தற்போது சீர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா என்ற அகண்ட பாரதம், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. வேற்றுமையை, வேற்றுமையாக பார்க்கும் நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் நலன் பயக்கும் வகையில், பல திட்டங்களை வகுக்கின்றனர். ஆனால், அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துகின்றனர். இதனால், திட்டங்களின் இலக்கை அடைய முடியவில்லை.இங்கு நடக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம், இதற்கான தெளிவை உருவாக்கும் அடித்தளமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், காணொலி காட்சி வாயிலாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் உட்பட பலர் பேசினர்.
 

தலைப்புச்செய்திகள்