Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12 ஆண்டுக்கு பின் கிழக்கே போகும் ரயில்

மே 27, 2022 10:58

மதுரை: மதுரை - தேனி அகல ரயில் பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் தங்களின் முதல் பயணத்தை உற்சாகமாக துவக்கினர். (மதுரை - தேனி செல்கையில் மேற்கேயும், தேனி - மதுரை வருகையில் கிழக்கேயும் பயணிக்கும். இந்த ரயிலை வைத்து தான் ‛கிழக்கே போகும் ரயில்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் இயக்குனர் பாரதிராஜா)

மதுரை - போடி இடையே 98 கி.மீ., துாரமுள்ள மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2011 ஜனவரியில் துவங்கியது. இத்திட்ட பணிகளுக்கு மத்தியில் முன் ஆட்சியிலிருந்து காங்., அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தேனி மாவட்ட வியாபாரிகள் போராட்ட குழு அமைத்து போராடினர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு 2016ல் இந்த அகல ரயில் பாதைக்கு ரூ.450 கோடி அனுமதிக்கப்பட்டது.
முதல்கட்டமாக தேனி வரை இயக்கப்படும் இந்த ரயில் தினமும் மதுரையில் இருந்து காலை 8:30 மணிக்கும், தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கும் புறப்படும். கட்டணம் ரூ.45. இன்றைய முதல் பயணம் பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். பஸ்சில் செல்வதை விட ரயிலில் பயணம் செய்வதால், கால நேரம் மிச்சமாகும் என்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்