Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை: பாஜக தலைவர் பேச்சு

மே 26, 2022 05:19

ஹைதராபாத்: "ராம ராஜ்ஜியம் அமைந்தால் தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்" என அம்மாநில பாஜக தலைவரும் கரீம்நகர் தொகுதி எம்.பி. பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் "நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு மதரஸாக்கள் தான் காரணம். மதரஸாக்கள் தீவிரவாத பயிற்சிக் கூடங்களாக செயல்படுகின்றன" என்றும் கூறினார். கரீம்நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பண்டி சஞ்சய் குமார் கலந்து கொண்டார் அதில் அவர் பேசுகையில், "இந்த நாட்டில் எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும் அதன் பின்னணியில் மதரஸாக்கள் உள்ளன. மதரஸாக்கள் தீவிரவாத பயிற்சிக் கூடங்களாகிவிட்டது. நாம் அதனை அடையாளம் காண வேண்டும்.

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மசூதிகளில் தோண்டினால் சிவலிங்கம் கிடைக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள எல்லா மசூதிகளையும் தோண்டுவோம். இதை நான் ஓவைசிக்கு சவாலாகவே விடுக்கிறேன். ஒருவேளை அங்கே பிரேதங்கள் கிடைத்தால் அது உங்களுடையது. சிவலிங்கம் கிடைத்தால் அதை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்" என்றார். மங்களூருவில் அண்மையில் ஒரு மசூதி தோண்டப்பட்ட போது அங்கிருந்து கோயில் கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து பாஜகவும், விஷ்வ இந்து பரிஷத்தும் அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. உத்தரப் பிரதேசத்தி சாஹி இக்தா மசூதி கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானா பாஜக எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்