Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு டீசலை அனுப்பியது இந்தியா

மே 23, 2022 06:16

கொழும்பு: இலங்கைக்கு, கடனுதவி திட்டத் தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்ய, இந்தியா கடந்த மாதம் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை வழங்கியது.

இலங்கை திவால் நிலையில் உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கு கடனுதவி திட்டத்தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புவதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்திய மக்கள் அனுப்பிய அரிசி, மருந்துகள் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றைக் ஏற்றிக்கொண்டு வரும் இந்திய கப்பல் இன்று கொழும்பு வந்தடையும் என இலங்கை தூதரகம் நேற்று முன்தினம் கூறியது.
இலங்கைக்கு நிவாரண பொருட்களுடன் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது சென்னையிலிருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் முதல் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.45 கோடி மதிப்பில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்