Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் தடை விதிப்பு

மே 23, 2022 06:16

பென்னாகரம்: கர்நாடக மாநிலம் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லு க்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 6-வது நாளாக தடை விதித்து உள்ளது. மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்