Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

500 கோடி உள்கட்டமைப்புத் திட்டங்கள்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

மே 23, 2022 12:08


புதுடெல்லி: இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வழியாகவே ஒப்புதல் வழங்கப்படும் என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு ஊக்குவிப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில்வாய்ப்பு களை பெருக்கும் நோக்கிலும் சரக்குகளை எளிதாக கொண்டு செல்லும் வகையிலும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள கடந்த ஆண்டு மத்திய அரசு கதிசக்தித் திட்டத்தை அறிவித்தது.

இந்நிலையில், வெவ்வேறு துறைகளில் இருந்து முன்மொழியப்படும் உள்கட்டமைத் திட்டங்களை பரிசீலிப்பதற்கு ‘இணைப்புத் திட்டக் குழு’ என்ற பெயரில் தனிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் வெவ்வேறு துறை சார்ந்து திட்ட உருவாக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.இனி எந்தத் துறையாக இருந் தாலும் ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு முதலில் ‘இணைப்புத் திட்டக் குழு’ விடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அதன் பிறகே, அந்தத் திட்டம் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்