Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் மாநிலங்கள்

மே 08, 2019 06:53

இந்தியா: இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் தேசிய மற்றும் மாநில கட்சிகள் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கத் தொடங்கியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக கட்சி மட்டுமே அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. தனித்துப் போட்டியிடும்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி , தெலுங்கு தேசம் கட்சி , சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது . அதனைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் போட்டியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி , ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு  உள்ளிட்டோர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி சாராத பிரதமர் வேட்பாளர்களாக பரவலாக பேசப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பதை மாநில கட்சிகளே முடிவு செய்யும் என்பது அனைவரும் அறிந்தது. ஆகையால் எந்தெந்த மாநிலங்களில் ஆதரவு தேவை என்பதைப் பார்க்கலாம். தென்னிந்தியாவில் பார்த்தோமே ஆனால் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளது. அதே போல் கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளும் , ஆந்திர பிரதேச மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளும் , மற்ற  மேற்கு வாங்க மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளும் , ஒடிஷா மாநிலத்தில் 21 மக்களவை தொகுதிகளும் உள்ளது. மேலும் டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளும் உள்ளது.

இவைகளின் மொத்த எண்ணிக்கை 169 ஆகும்.  இந்தியாவில் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இதில் 543 உறுப்பினர்கள் மக்களால் தேர்நதெடுக்கப்படுபவர்கள் ஆவர். மீதமுள்ள இருவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க 273 உறுப்பினர்கள் தேவை. ஆனால் குறிப்பிட்ட சுமார் 6 மாநிலங்களில் தமிழகத்தில் திமுகவும் , மற்ற மாநிலங்களில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படுகிறது. இந்த ஆறு மாநிலங்களில் மொத்த மக்களவை தொகுதிகளில் எண்ணிக்கை சுமார் 169 ஆக உள்ளது.

இது மொத்த மக்களவை உறுப்பினர்களில் சுமார் 31.13 % ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் திமுகவின் நிலைப்பாடு மாறாதப் பட்சத்தில் இந்த மாநில கட்சிகளின்  மக்களவை உறுப்பினர்களின் செல்வாக்கு  குறைய வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்தப் படியாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்டது . இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்தாலும் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு அலை வீசி வருகிறது. 

இவர்களின் ஆதரவும் மாநில அரசியல் கட்சிகள் பெரும் நிலையில் கட்டாயம் மாநில கட்சிகள் தான் மத்தியில் ஆட்சி செய்யும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆகவே  மே -23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேலும் சில மாநிலக் கட்சிகள் ஆலோசனை செய்து காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒருவரை பிரதமராக தேர்வு செய்யப்படலாம்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்