Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முட்டை சாண்ட்விச்

மே 18, 2022 06:12

தேவையான பொருட்கள்
முட்டைகள் – 2
கோதுமை பிரெட் துண்டுகள் – 4
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பால் – சிறிதளவு
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணியில் வெண்ணெயை போட்டு சூடானதும் முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும்.
  • கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

தலைப்புச்செய்திகள்