Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு குட் நியூஸ்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மே 05, 2022 05:40

சென்னை:பள்ளி மாணவ- மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேச தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்துடன் தமிழக பள்ளிகல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் மூலம் மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தை கற்க, பேச முடியும்.
அதன்படி Google read Along  என்ற செயலியை பயன்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக Google India & School Education இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ரூ.181 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். பள்ளிகல்வித்துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக 208 அரசு பள்ளி கட்டிடங்கள் ரூ.181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  
மேலும் ஆய்வகம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுற்றுசுசுவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி நிறுவன கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக முத்தமிழர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நூல்களை அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்