Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 5 வணிகர் தினம்: மளிகை கடைகள் மூடல்

மே 05, 2022 11:27

சென்னை: தமிழகத்தில், இன்று  வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக் கடைகள் மூடப்படும்; ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, பழம், டீக்கடை போன்ற வணிகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, 39வது வணிகர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருச்சியில் இன்று, தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இதேபோல், பல்வேறு வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்கள், வணிகர் தினத்தை கொண்டாடுகின்றனர். இதனால், இன்று மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வணிகர் தினத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக ஹோட்டல் சங்கத்தினர் இன்று காலை மட்டும் ஹோட்டல்களை மூடி, காலை 11:00 மணிக்கு மேல் திறக்க போவதாக தெரிவித்துள்ளனர். ஹோட்டல்களில் காலை டிபன் கிடைக்காது.

தலைப்புச்செய்திகள்