Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்னணு வாக்கு இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

ஏப்ரல் 30, 2022 12:41

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது என தேர்தல் கமிஷனர் சுஹில் சந்திரா தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பக்தவார்பூர் பகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஹில் சந்திரா புதிதாக நிர்வாக கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார். அப்போது சிறப்புரையாற்றிய அவர் தேர்தல் வாக்கு இயந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

மின்னணு வாக்கு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் ஓர் முக்கிய மைல்கல்லாக திகழ்வதாகவும் கடந்த நான்கு பாராளுமன்ற தேர்தல்களிலும் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தேர்தல் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் இதுவரை 350 கோடி இந்திய மக்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மூலமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வாக்கு செலுத்தும் பணி துல்லியமாகவும் வேகமாகவும் நடைபெறுவதாக கூறிய அவர் ஒரே ஒரு சிப் கொண்டு புரோக்ராம் செய்யப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பல ஆண்டு காலமாக தேர்தலில் தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் பல, மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வந்துள்ளன. இதற்கு அவர் தற்போது தனது உரை மூலம் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்