Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏப். 24-ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி

ஏப்ரல் 19, 2022 10:45

புதுடெல்லி: வரும் ஏப். 24 ம் தேதி அரசு முறை பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி.

கடந்த 2019, ஆகஸ்ட் 5 ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37-. 35 ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி உருவாக்கியுள்ளன. இந்தகூட்டணிதலைவர்களை கடந்தாண்டு ஜூனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது குப்கர் கூட்டணி தலைவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந் நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வரும் 24 ம் தேதி காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் பாலி கிராமத்தில்கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். மோடி வருகையையொடி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்