Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும்: ஐகோர்ட்

ஏப்ரல் 15, 2022 10:47

புதுடெல்லி: ஜீவனாம்ச வழக்கு ஒன்றில் மனைவியின் கொடுமை, திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவது ஆகியவற்றை காரணமாக கூறி கணவர் ஜீவனாம்சம் தர மறுத்தார். இந்த காரணங்கள் மனைவி ஜீவனாம்சம் பெறுவதை தடுக்காது என கூறி டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மனைவியை பிரிந்த கணவர், அவருக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் மனைவி கொடுமை செய்ததாகவும், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாகவும், கைவிட்டுச் சென்றதாகவும் கூறி பராமரிப்புச் செலவை வழங்க முடியாது என வாதாடினார். இதனை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங் அவரது மேல்முறையீட்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: பராமரிப்புச் சட்டம் ஒரு ஆணின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சமீபத்திய நடைமுறை சட்டத்தினை தவறாக பயன்படுத்தவும், கணவன் மீது சுமத்தப்படும் பொறுப்பிலிருந்து தப்பிக்க ஆதாரமற்ற சர்ச்சைகளை உருவாக்குவதுமாக உள்ளது. மனைவி கொடுமை மற்றும் துன்புறுத்தல் போன்ற காரணங்களை கூறி பராமரிப்புச் செலவை வழங்காமல் இருக்க சட்டத்தில் இடமில்லை.

மனைவி கொடுமை காரணமாக கணவருக்கு விவாகரத்து வழங்கப்படும் வழக்குகளில் கூட, நீதிமன்றங்கள் மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்குகின்றன. மனைவி ஜீவனாம்சம் கோருவதற்கு கொடுமைப்படுத்தினார் என்ற காரணம் தடையில்லை. அவை ஜீவனாம்சத்தை பறிக்காது. இதற்கு பல்வேறு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் முன்னுதாரணங்கள் உண்டு. மனைவி பிரிந்துச் சென்ற பின் வேறொருவருடன் தொடர்ந்து உறவில் இருந்தார் என்பதை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். பிரிந்த பின் ஒருமுறை அல்லது எப்போதாவது ஒருவருடன் உறவில் இருப்பதனை காரணம் காட்டி ஜீவனாம்சத்தை நிறுத்த முடியாது. என கூறினார்.

தலைப்புச்செய்திகள்