Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் கடையில் பிரதமர் படத்தை வைத்த அண்ணாமலை

ஏப்ரல் 14, 2022 03:02

கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் படத்தை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோல்டு வின்ஸ் பகுதியில், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம், ரேஷன் கார்டு தாரர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை, அங்கு, முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில், பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.

ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ., ஆதரவாளர், பிரதமர் மோடியின் படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் இச்செயல், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்