Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவர்களுக்கான கோடைகால ஓவியப்போட்டி

ஏப்ரல் 13, 2022 07:26

சென்னை: டெகத்லான் OMR மற்றும் ஸ்போர்ட்டனா அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடைகால ஓவியப்போட்டியை வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது.

சென்னையில் இயங்கி வரும் ஸ்போர்ட்டனா அகாடமி பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. தற்போது டெகத்லான் OMR மற்றும் ஸ்போர்ட்டனா அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடைகால ஓவியப்போட்டியை வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது.

இப்போட்டியில் LKG முதல் VIII வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கு பெறலாம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் MGM Dizzee world சலுகை கூப்பன் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் 10 வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பழைய மகாபலிபுரம் சாலை, விவிரா மால், டெகத்லான் - OMR , 24.04.2022 அன்று காலை 10 மணி முதல் 12.20 வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்த மேலும் விபரங்களை 9380869045 / 8778394729 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்