Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களுக்கு உதவுவதற்காகவே புதிய கூட்டுறவு கொள்கை: அமித் ஷா

ஏப்ரல் 13, 2022 10:47

புதுடெல்லி: ''நாடு முழுதும், சீரான நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே, புதிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்குவது தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், டில்லியில் துவங்கியது. இதில், அமித் ஷா பேசியதாவது: தற்போதுள்ள சவால்கள்,எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதன்படியே, புதிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படும்.

நாடு முழுதும் ஒரே சீரான விதிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மாநிலங்களுக்கு உதவுவதற்காகவே புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு, இது உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்