Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண மோசடி வழக்கு: சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் சொத்துக்கள் பறிமுதல்

ஏப்ரல் 06, 2022 11:30

புதுடில்லி :பண மோசடி வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள், அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், தொழிலாளர் குடியிருப்புகள் கட்டும் திட்ட மேம்பாட்டு பணிகளில், 1,034 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், தொழிலதிபர் பிரவீன் ராவத் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்
துறையினர் நேற்று கூறினர். மும்பையை அடுத்த அலிபாக் நகரில் உள்ள நிலங்கள் மற்றும் தாதர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை, பறிமுதலான
சொத்துக்கள் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்