Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் தேர்வால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம்: அழகிரி

மார்ச் 22, 2022 10:59

சென்னை : சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்க்கிறோம். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட சில இடங்களில், தி.மு.க.,வினர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனால், நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், மிகப் பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். விரைவில், இதற்கு ஒரு தீர்வை அவர் தருவார் என நம்புகிறோம்.

காங்கிரசுக்கு கூட்டுத் தலைமை என்பது சந்தர்ப்பவாதம்; சபைக்கு உதவாது. கூட்டுத் தலைமை வாயிலாக, அரசியல் கட்சியையோ, அரசாங்கத்தையோ நடத்த முடியாது.காங்கிரசுக்கு ராகுல் தலைவராக வேண்டும் என, நாடு முழுதும் உள்ள தொண்டர்கள் விரும்புகின்றனர். விரைவில், தமிழக காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில், தலைவராக வெற்றி பெற்ற விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள், அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்