Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 3 மாதங்களுக்கு மக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

மார்ச் 21, 2022 11:11

சென்னை: மக்களிடம் வலுவான நோய் எதிர்ப்பு திறன் உருவாகி இருப்பதும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி இருப்பதும் தான் இந்த அளவுக்கு கொரோனா கட்டுப்பட காரணம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 3 முறை ஏற்பட்ட கொரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கோ அல்லது புதிய உருமாறிய வகை பாதிப்பு அதிகரிப்பதற்கோ இனி வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தியது, ஒமைக்ரான் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதது ஆகியவற்றின் மூலம் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கணித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,761 ஆக சரிந்துள்ளது. அதே போல் ஒருநாள் உயிரிழப்பும் 127 ஆக குறைந்துள்ளது.

மக்களிடம் வலுவான நோய் எதிர்ப்பு திறன் உருவாகி இருப்பதும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி இருப்பதும் தான் இந்த அளவுக்கு கொரோனா கட்டுப்பட காரணம் என்று கூறப்படுகிறது.

இதில் நோய் எதிர்ப்பு திறன் அளவு என்பது குறிப் பிட்ட காலத்துக்கு பிறகு குறைந்துவிடும். இருந்தாலும் கலப்பு நோய் எதிர்ப்பு திறன் என்பது உடலுக்கு பாதுகாப்பை தரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே முககவசம் அணிவது கட்டாயம் கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்கி கொள்ளலாம் என்று கருத்து வெளியிட்டனர்.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொரோனா கட்டுக்குள் வந்திருப்பது சரிதான். ஆனால் நம்மை சுற்றி இருக்கும் ஆசிய நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவிக்கொண் டிருக்கிறது. எனவே நாமும் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்து கொள்வது அவசியம். இன்னும் 3 மாதங் களுக்கு முககவசம் அணிவது கொரோனா கட்டுப்பாடு களை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.

தடுப்பூசிகள் மட்டுமே இந்த கொடிய காலத்தில் நம்மை காக்கும் கவசம். எனவே அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்