Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக.,வினர் 16 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை

மார்ச் 20, 2022 11:20

சென்னை: நடைபெற்று முடிந்த மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் வடபழனி, தி.நகர், அம்பத்தூர், ஆவடி, பாடி, முகப்பேர், திருநின்றவூர் பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்த 16 அ.தி.மு.க.வினர்களை கட்சியை விட்டு நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த வடபழனி நா.சந்திரன், 130 வடக்கு வட்ட செயலாளர், சந்தியப்பன் (எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர்).

திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் (மதுரவாயல் மேற்கு பகுதி அவைத் தலைவர்), பூந்தமல்லி நகராட்சி 19-வது வார்டு கார்த்திக் ராஜா (மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர்), தேவராஜூலு (எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்).

திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சத்யநாராயணன் (வட்டக் கழக முன்னாள் பொருளாளர்), விஜயா குபேந்திரன் (அம்பத்தூர் கிழக்கு பகுதி), குபேந்திரன் (அம்பத்தூர் கிழக்கு பகுதி), சீனிவாசன் (ஆவடி தெற்கு தொகுதி துணை செயலாளர்), செல்வராஜ் (அம்பத்தூர் வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி).

ஆவடி மாநகராட்சியை சேர்ந்த செல்லமுத்து (எம்.ஜி. ஆர்.மன்ற இணைச் செயலாளர்), அமீது (சிறுபான்மையினர் நலப்பிரிவு முன்னாள் துணை செயலாளர்), பெருமாள் (ஆவடி மேற்கு பகுதி 6-வது வட்ட கழக செயலாளர்), ஆப்ரஹாம் கர்ணா 24-வது வார்டு (ஆவடி கிழக்கு பகுதி), வளர்மதி 20-வது வார்டு பட்டாபிராம் திருநின்றவூரை சேர்ந்த அருணாசலம் (நகர பொருளாளர்).

மேலும் சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்), உஷா (கெங்கவல்லி மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர்), ஆனந்தி (தம்பட்டி பேரூராட்சி), பிரபாகரன் (தம்பட்டி பேரூராட்சி).

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் 16-வது வார்டு (கழக முன்னாள் செயலாளர்) ஆகிய 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்