Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அந்தமான் உள்ளாட்சி தேர்தல்; பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம்

பிப்ரவரி 26, 2022 10:47

சென்னை-அந்தமானில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அந்தமான் யூனியன் பிரதேசத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மார்ச் 6ல் தேர்தல் நடக்கிறது. அங்குள்ள போர்ட் பிளேர் நகராட்சி, சோர்ப் பாய்ன்ட் பேரூராட்சி, ஹோப் டவுன் பேரூராட்சி, பம்பு பிளட் பேரூராட்சி ஆகிய இடங்களில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளுமாறு, அண்ணாமலைக்கு தேசிய தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து, நேற்று காலை அந்தமான் சென்ற அண்ணாமலை, போர்ட் பிளேரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றும் அவர், அந்தமானில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தலைப்புச்செய்திகள்