Friday, 7th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து; இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரகீம் கைது

பிப்ரவரி 25, 2022 03:10

சென்னை: எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரகீமை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல்ரகீம். இவர் மத கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தென் பாரத இந்து மகாசபை தலைவர் வீர்.வசந்தகுமார் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தார்.

 இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தடா அப்துல்ரகீமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் கோர்ட்டு நீதிபதி நாகராஜன் முன்பு அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். தடா அப்துல்ரகீமை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தடா அப்துல் ரகீம் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்புச்செய்திகள்