Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.வில் மேலும் 18 போட்டி வேட்பாளர்கள் நீக்கம்- கட்சித் தலைமை நடவடிக்கை

பிப்ரவரி 16, 2022 07:17

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரப்பூர்வ தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக நிற்கும் மேலும் 18 தி.மு.க.வினரை கட்சி மேலிடம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்தும் - தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பீர்க்கன்கரணை பேரூர் கழகம், 1-வது வட்டத்தைச் சேர்ந்த ரா.ஹேமாவதிக்கு உறுதுணையாக இருக்கும் பேரூர் துணைச் செயலாளர் அ.கதிரவன், 1-வது வார்டு செயலாளர் ஏ.சேகர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குளச்சல் நகராட்சி, 24-வது வார்டு கிளைச் செயலாளர் குறைசா பீவி, நாகர்கோவில் மாநகராட்சி, 11-வது வார்டைச் சேர்ந்த 7-வது வார்டு கிளைச் செயலாளர் முத்துசெல்வி மற்றும் கனக ரூபி ஜான், 30-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதிகள் பிரசாத், சகாயகுமார். 32-வது வார்டைச் சேர்ந்த வட்ட முன்னாள் பிரதிநிதி அனிஷா ஜேம்ஸ்ராஜன், முன்னாள் கவுன்சிலர் கில்டா பீட்டர், நித்யாகுமாரி, 34-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதி வால்டர் கென்னடி, 46-வது வார்டைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மாறின், 26வது வட்டத்தைச் சேர்ந்த வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் குமார், 1-வது வார்டைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளம் பிறை ஷேக்.

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.ராஜேந்திரன் - மதுரவாயல் தெற்கு பகுதி, 152-வது வட்டத்தைச் சேர்ந்த வளசரவாக்கம் நகர முன்னாள் செயலாளர் அ.ஜெயசீலன் - சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பொருளாளர் சி.ரங்கன் 189-வது வட்ட பிரதிநிதி ஆர்.கன்னியப்பன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தலைப்புச்செய்திகள்