Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்

பிப்ரவரி 12, 2022 10:16

இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டு வர நாங்கள் விரும்பினோம், ஆனால் பின்னர் நமது நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாது என்பதை உணர்ந்தோம்” என கூறினார்.

மேலும் அவர் “எனது அரசு மற்றும் அமைச்சகங்கள் விரும்பிய முடிவுகளை மக்களுக்கு வழங்குவதில் தோல்வியடைந்துள்ளன. அரசாங்கத்துக்கும் நாட்டு நலனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் மிகப் பெரிய பிரச்சினை” எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்