Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: டிவி நிறுவனத்திற்கு நோட்டீஸ்

ஜனவரி 18, 2022 10:33

சென்னை : பிரதமரை மறைமுகமாக கிண்டலடித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு விளக்கம் கேட்டு 'டிவி' நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான காமெடி நிகழ்ச்சி 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜன.15 ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமரை கிண்டலடிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றன. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பாக 'டிவி' சேனலின் நிர்வாக இயக்குனரிடம் மத்திய தகவல், ஒளிபரப்பு துறை வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்