Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் சமத்துவ பொங்கல் விழா

ஜனவரி 16, 2022 12:09

கோவை: கோவை மாவட்டம் சின்னவேடப்பட்டி மார்டின் பண்ணை வீட்டில் 101 பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்த விழா  லீமாரோஸ்  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்திந்திய கத்தோலிக்க பேரவையின் தலைவர் அருள்தாஸ், ரோட்டரி கிளப் தலைவர்  கவிதா கோபால கிருஷ்ணன், லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர்  வில்சன் தேவராஸ், IJK கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், மகளிர் அணித் தலைவி, உடையர் சங்கம், பார்த்தகுல சங்கம், மார்டின் ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள், ரோட்டராக்ட் சங்க மாணவர்கள், தையல் பயிற்சி பள்ளியில் பயிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் சிறப்பைக் குறித்து லீமாரோஸ் கூறியதாவது; இந்த சமத்துவ பொங்கல் விழாவனது கடந்த ஐந்து வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் இதில் மதச் சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என அனைத்து மதத்தையும் சார்ந்தவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். 

இவ்விழாவானது முதல் வருடம் மார்டின் ஹோமியோபதி கல்லூரியிலும் இரண்டாம் வருடம் பீளமேட்டில் உள்ள இராதாகிருஷ்ணா வளாகத்திலும் மூன்றாம் வருடம் கொடீசீயா வளாகத்திலும் நான்காம் வருடம் SM மார்டின் அவர்களின் இல்லத்திலும் இவ்வருடம் ஆலம் ஆயுர்வேத பண்ணையிலும் கொண்டாடப்படுவதாககூறினார்.

மதச் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக திருவள்ளுவர், ஆரோக்கியமாதா, விநாயகர், புத்தர் ஆகியோருடைய சிலைகளை இவ்விழாவில் வைத்திருப்பதை பெருமையுடன் சுட்டிக்காண்பித்தார். திருவள்ளுவர் குறித்துக் கூறும்போது தனக்கு மிகவும் பிடித்தவர் என்றும் அவருடைய குறள்கள் ஒவ்வொன்றும் மனதைக் தொடும் ஆழமான அர்த்தங்கள் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஆகவே இவ்விழா திருவள்ளுவருக்காக எடுக்கப்பட்ட விழா என்றும் கூறினார். 

இவ்விழாவில், குழந்தைகளுக்கு உரி அடிப்பது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டது. தையல் பள்ளியில் பயிலும் பெண்களுக்கு மூன்று மாத பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்குப்படுவதாகவும் கூறினார்.

மேலும், தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையைக்கண்டு பயப்படாமல் காய்கறி, பழங்கள் போன்ற சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும்  லீமாரோஸ் கூறினார்.

தலைப்புச்செய்திகள்