Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பானி புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து வருகிறேன்: மோடி

மே 03, 2019 11:06

போபால்: ராஜஸ்தானில் கரவ்லி பகுதியில் நடைப்பெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் அனைவரும் ஒன்றாக கூடியுள்ள, அதே நேரத்தில் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் கடுமையான சூறாவளியை எதிர்கொள்கின்றனர். பானி புயல் தொடர்பாக ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பானி புயல் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் மூலம்  உடனுக்குடன் அறிந்து வருகிறேன்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் தினமும் இருந்து வந்தது. எந்தவொரு நகரமும் பாதுப்பாக இல்லை. மும்பையில் 2008-ல்  பயங்கரவாதிகள் எப்படி தாக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் ஒரு பெரிய எதிரி, மசூத் அசார் ஒரு உலகளாவிய பயங்கரவாதியாக  அறிவிக்கப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானில் உட்கார்ந்திருக்கும் இந்த பயங்கரவாத தலைவர், இந்தியாவிற்கு காயங்களுக்கு  மேல் காயங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது இளைஞர்கள் ஐபிஎல் போட்டியை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  ஆனால் இது இந்தியாவில் விளையாட முடியாமல் 2 முறை  தென்னாப்பிரிக்காவில் விளையாடப்பட்டது. இந்த சம்பவம்  2009 & 2014 இடைப்பட்ட காலத்தில் நடந்தது. இந்த அரசாங்கத்தை பார்த்து பயங்கரவாதிகள் பயப்படுகிறார்கள். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்