Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: அமைச்சர் தகவல்

டிசம்பர் 05, 2021 11:14

விழுப்புரம்-''தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இல்லை,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.விழுப்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை  ஆய்வு செய்ய வந்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

மாநிலத்தில் தடுப்பூசி முதல் தவணை 79.14 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 45.12 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.தென்ஆப்ரிக்கா உட்பட நான்கு நாடுகளில் ஒமைக்ரான் புதிய வைரஸ் தோன்றியதை அடுத்து, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, கோவை பன்னாட்டு விமான நிலையங்களிலும், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.நேற்று வரை மூன்று பயணியரில் இங்கிலாந்தில் இருந்து வந்த இருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது உருமாறிய கொரோனாவா அல்லது டெல்டா பாதிப்பா என, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒமைக்ரானாக இருக்க வாய்ப்பு இல்லை.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்