Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஏற்கனவே ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது: அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டிசம்பர் 05, 2021 11:02

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு முன்பே இந்தியாவில் ஒமைக்ரான் பரவியுள்ளது' என, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தனியார் 'டிவி' சேனல் ஒன்றுக்கு சி.எஸ் ஐ.ஆர்., தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது: உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது என்றும், அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே சிலரிடம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எந்த வெளிநாடுக்கும் செல்லாதவர்கள். பல முக்கிய நகரங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கலாம். எனினும் ஒமைக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலான விஷயம்.

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு 'ஹெல்மெட்' அணிவது எப்படி முக்கியமோ, அதேபோல தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.ஹெல்மெட் அணிந்திருந்தாலும் விபத்து ஏற்படலாம். அதுபோல் தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்றால் பாதிக்கப்படலாம். ஆனால் இரண்டுமே உயிரை பாதுகாக்கும் சாதனங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்