Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்டோ கட்டணத்துக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி: மத்திய அரசு அறிவிப்பு

நவம்பர் 27, 2021 09:53

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை.

இந்த இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.

இந்த உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், ஆன்லைன் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்