Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து

நவம்பர் 25, 2021 01:30

கன்னியாகுமரி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலும் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது.

இன்று காலை கடல் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. அவை பாறைகளில் முட்டி மோதி சிதறியதை பார்க்க பயங்கரமாக இருந்தது. கடல் சீற்றம் காரணமாக இன்று காலை விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல இன்று இந்த பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் வள்ளங்கள், கட்டுமரங்கள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

தலைப்புச்செய்திகள்