Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் 

நவம்பர் 24, 2021 12:22

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற  எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள லோக்சபா குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில்  ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 2021’ இடம்பெற உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவின் மூலம், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களான, 

1.விவசாயிகளின் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி) சட்டம், 2020
2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம், விவசாய சேவைகள் சட்டம், 2020,
3.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020. ஆகிய இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்தால் மட்டுமே தங்கள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்