Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

நவம்பர் 11, 2021 10:53

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் செங்காத்தாகுளம் கிராமத்தில் உள்ள ஏரிக்குப்பம் முந்திரி தோப்பில் கடந்த 6-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது 38) என்பதும், கொலை சம்பவம் தொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மகேஷ் (38) என்பவரை நேற்று பெரியபாளையம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் போலீசாருக்கு கொடுத்த தகவலின்படி தமிழரசு (28), வெங்கடேசன் (35), முத்து (20), ஆறுமுகம் (28) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தமிழரசு தனது நண்பர்களான மகேஷ், வெங்கடேசன், முத்து, ஆறுமுகம் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 6-ம் தேதி சம்பத்தை வரவழைத்து முன்விரோதத்தில் முந்திரி தோப்பில் மதுவை ஊற்றி கொடுத்து போதையில் இருந்த சம்பத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தததும் தெரியவந்தது. பின்னர், அவரது தலையை அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. மேற்கண்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்