Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வின் காரணமாக தீக்குளித்து தறகொலை முயற்சி செய்துகொண்ட மாணவி; உயிரிழப்பு

அக்டோபர் 16, 2021 05:24

கடந்த மாதம் கூடுவாஞ்சேரி அருகே நீட் தேர்வின் காரணமாக தீக்குளித்து தறகொலை முயற்சி செய்துகொண்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஐயஞ்சேரி பிள்ளையார் கோயில் தெருவைகச் சேர்ந்தவர் கமலதாசன் இவர் ஒரு தனியார் பள்ள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்

 இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படாத காரணமாக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துவந்த நிலையில், 

அனு வயது 17. என்ற மாணவி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில்  12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 12ஆம் தேதி ஆவடியில் நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறியடித்து வீட்டின் வெளியே வந்துள்ளார். 

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சிகிச்சைக்காக மாணவியை 40 சதவிகித தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்

மேலும் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார்

இந்நிலையில் மாணவியின் உடலை தற்போது தனது சொந்த ஊரான ஊரப்பாக்கத்தில் அடுத்த அய்யன் சேரி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்