Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிவிஎஸ் ஷோரூமில் புதிய மாடல் ஜூபிடர் 125 சிசி வாகன அறிமுகம்

அக்டோபர் 14, 2021 04:45

புதுச்சேரி; புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவிஎஸ் வாகன விற்பனையில் 10 வருட சேவையாற்றி வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஆன முத்தியால்பேட்டை ராஜ் விஜய் டிவிஎஸ் ஷோரூம் இல் புதிய ஜூபிடர் 125சிசி இருசக்கர வாகன அறிமுகம் மற்றும் முதல் விற்பனை நிகழ்வு நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்து இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயுதபூஜை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் டீலர், உரிமையாளர், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்