Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அக்டோபர் 10, 2021 05:43

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதையடுத்து. கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், இரத்ததான முகாம், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

புகழ்பெற்ற திருக்கடையூர் ஶ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வர்ர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை ஆராதனையும் நடைபெற்றது. 

மயிலாடுதுறை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இதேபோன்று மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பாமகவினர் ரத்ததானம் அளித்தனர். 
தொடர்ந்து கொத்ததெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்  மாவட்ட செயலாளர் காமராஜ், நகர செயலாளர் கமல்ராஜா, மாநில துனை அமைப்பு செயலாளர் காசிபாஸ்கர், மாவட்ட துணை தலைவர் ரவி, கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் செழியன் மற்றும் மதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்