Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவியிடம் கூட சொல்லாமல் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்: நிதின் கட்கரி பேச்சு

செப்டம்பர் 23, 2021 09:35

மனதில் தோன்றியதை பட்டென்று வெளிப்படையாக கூறுபவர் நிதின் கட்கரி. இதனால் எதிர்க்கட்சிகளிடமும் நற்பெயரை சம்பாதித்துள்ளார். மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பர் நிதின் கட்கரி. இவர் தனது மனதில் தோன்றியதை பட்டென்று சொல்லக்கூடியவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, யூடியூப் நிறுவனம் ராயல்டியாக மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்குகிறது எனத் தெரிவித்தானர்.

இந்த நிலையில், இன்று டெல்லி- மும்பை இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்து வருவதை அரியானா மாநிலத்தில் உள்ள பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஒரு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘எனக்கு திருமணம் ஆன புதிது. எனது மாமனாரின் வீடு சாலையில் நடுவே அமைந்திருந்தது. புதிதாக அமைக்கப்படும் சாலைக்கு இடையூறாக மாமனாரின் வீடு இருந்தது. இதனால், எனது மனைவிடம்  கூட தெரிவிக்காமல் அந்த வீட்டை இடிக்க நான் உத்தரவிட்டேன்’’ எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்