Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாரா நர்சிங் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா 

செப்டம்பர் 21, 2021 02:32

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு வில் உள்ள சாரா நர்சிங் கல்லூரியின் 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் ‌தலைமையில், நடைபெற்றது.
  
இந்நிகழ்ச்சியில் முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வெள்ளி விழா நுழைவு வாயிலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து  மற்றொரு வெள்ளி விழா நுழைவு வாயிலை தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட வேளாண்மை விற்பனை கழகத்தின் முன்னாள் தலைவர் தனசேகர்  ஆகியோர் திறந்து வைத்தார். மேலும் கல்லூரி மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் கரக ஆட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.சாரா நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்மொழி வரவேற்று பேசினார்.

இதில் நிறுவனர் தலைவர் டாக்டர் ஜெய்லானி தொடக்கவுரை ஆற்றினார். வெள்ளி விழா நுழைவு வாயில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாவட்ட வேளாண்மை விற்பனை கழகத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.தனசேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார்கள்.  கல்லூரி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியை.கே.மரியம் உல் ஆசியா சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்ததார்.

வெள்ளி விழா ஆவணப் படத்தை கல்லூரி செயலாளர் பெனாசிர் பேகம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் பி.எம்.கே. முகம்மது சதுர்தீன், கல்லூரி துணை செயலாளர் ஜுஹி ஜஹான், மக்கள் தொடர்பு அலுவலர் எம்.சகாபுதீன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,மற்றும் ஊழியர்கள்,திருப்பூர் மாவட்ட திமுக தொண்டர் அணி செயலாளர் எஸ்.வி.எஸ். சாகுல் ஹமீது, ரோட்டரி சங்க தலைவர் ப. கதிரவன், சமூக ‌செயற்பாட்டாளர் டாக்டர். சிவசங்கரன், மணக்கடவு ஊராட்சி தலைவர் செல்வி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி பேராசிரியர் தினேஷ் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்