Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொண்டைக்கடலை சாதம்

செப்டம்பர் 18, 2021 05:27

தேவையான பொருட்கள்.: ஊறவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், சீரகச் சம்பா அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, 
தக்காளி - 2, 
கீறிய பச்சை மிளகாய் - 2, 
தண்ணீர் - இரண்டரை கப், 
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், 
புதினா - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, 
நெய் - ஒரு டீஸ்பூன், 
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை.:  குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப்போட்டு வதக்கி பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்னர் புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

இதில் ஊறிய கொண்டைக்கடலை சேர்த்து நன்கு சுருளவதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இதில் அரிசி, கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கிளறி மூடிப்போட்டு இரண்டு விசில்விட்டு இறக்கினால், கமகம கொண்டைக்கடலை சாதம் தயார்.

சிறப்பு.:  புரதச்சத்துமிகுந்த இந்தக் கொண்டைக்கடலை சாதம். வளரும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கும் உடல்பலத்துக்கும் பெரிதும் துணைபுரியும்.

தலைப்புச்செய்திகள்